இலங்கையில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களின் வாக்களிப்பானது காலை 7 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை நடைபெற்றுவந்தது.
எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் நேரத்தை மேலும் ஒரு மணித்தியாலத்தால் அதிகரிப்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு ஆலோசித்து வருகின்றது.
பதிவு செய்யப்பட்டுள்ள வாக்குகளின் அடிப்படையில் ஒரு மணி நேரத்தில் 130இற்கும் அதிகமானோர் வாக்களிக்க வேண்டும். இது சாத்தியமற்றதாக காணப்படுவதால் வாக்களிக்கும் நேரத்தை மேலும் அதிகரிப்பதற்காக விசேட வர்த்தமானியை வெளியிடுவது தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்றது.
வாக்குச்சீட்டானது 27 அங்குல நீளமாக அச்சிடப்பட்டு வருவதாக தெரிவித்த சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 35 ஆக இருப்பதன் காரணமாக வாக்களிக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக தெரிவித்தார்.
No comments: