மட்டக்களப்பு மெதடிஸ்த திருச்சபை-புகலிடம் நிறுவனத்தின் 2019ஆம் ஆண்டிற்கான சர்வதேச சிறுவர் தின நிகழ்வானது வியாழக்கிழமை (24) மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் வடக்கு கிழக்கு திருமாவட்ட அவைத்தலைவரும் புகலிட நிறுவனத்தின் பணிப்பாளருமான அருட்திரு எஸ்.எஸ். ரெரன்ஸ் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
மாற்றுத் திறன் கொண்ட சிறுவர்களுக்கான மேம்பாட்டு நிலையமான "புகலிடம்" நிறுவனத்தின் சிறுவர் தினக் கொண்டாட்ட நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி ஆணையாளர் யு.சிவராஜா அவர்களும், சிறப்பு அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் நுண் கலைத்துறை தலைவர் எஸ்.சந்திரகுமார், கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் நுண் கலைத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் Dr.எஸ்.ஜெயசங்கர், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைத் திணைக்களத்தின் மட்டக்களப்பு பிராந்தியத்திற்கான பொறுப்பதிகாரி எஸ்.மணிவண்ணன் அவர்களும், கௌரவ அதிதியாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட சமூக உளவியல் அதிகாரி ஏ.பிரபாகர் அவர்களும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் சிறுவர்களுக்கான பட்டம் விடுதல், முகவர்ணம் பூசுதல், புகலிட நிறுவன ஆசிரியர்களின் நடனம், மாணவர்களின் நடனம், ஆசிரியர் மற்றும் மாணவர்களின் நாடகம் ஆகிய நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்று நிகழ்வை அலங்கரித்தன.
No comments: