News Just In

10/16/2019 09:16:00 AM

தபால் மூலம் வாக்களிப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்ட அதிகளவான விண்ணப்பங்கள் நிராகரிப்பு

நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் 78,403 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவலின்படி
சமர்ப்பிக்கப்பட்ட  விண்ணப்பங்கள்: 717,918 
நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள்:   78,403
செல்லுபடியான  விண்ணப்பங்கள்: 639,515

இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுக்களை விநியோகிக்கும் பணிகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 03ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 09ஆம் திகதி வரை நடைபெறுமென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

No comments: