News Just In

10/16/2019 08:06:00 AM

காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரிப்பு

நாட்டில் தற்சமயம் நிலவும் மழையுடனான காலநிலையின் காரணமாக காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வழிந்தோடும் நிலையை எட்டியுள்ளது.

நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்குமாயின் அதன் வான்கதவுகள் தாமாக திறந்து கொள்ளும் என நீர்ப்பாசன பொறியிலாளர்கள் அறிவித்துள்ளனர்.

நுகவெல, ரிவர்சையிட், மாவத்துர, உலப்பண்ணை நகரிலிருந்து கம்பளை வரையிலான பகுதி, வெலிஒய, பேராதனை, கட்டுகஸ்தோட்ட, பொல்கொல்ல ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் மஹாவலி கங்கையை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

No comments: