News Just In

11/25/2025 05:45:00 AM

1000 பிக்குகளின் இரகசிய திட்டத்தை அறிந்த அநுர அரசு! தமிழர் பகுதியில் கைதுகள் தீவிரம்


1000 பிக்குகளின் இரகசிய திட்டத்தை அறிந்த அநுர அரசு! தமிழர் பகுதியில் கைதுகள் தீவிரம்..



திருகோணமலை புத்தர் விவகாரத்தையடுத்து தற்போது மட்டக்களப்பில் தொல்பொருள் இடங்களை அடையாளப்படுத்தும் வகையில் சில பதாதைகளை தொங்கவிட்டிருந்த விடயமானது பேசுபொருளாகியுள்ளது.

இதற்கு பிரதேச சபையிடம் அனுமதி பெறவில்லையென்ற கருத்தும் கூறப்படுகின்றது, அதனையடுத்து சில பதாதைகள் அகற்றப்பட்டுள்ளன.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தொல்பொருள் இடங்களுக்கு பார்வையாளர்களை வழிநடத்தும் பல அறிவிப்பு பலகைகள் அகற்றப்பட்டமை தொடர்பில் உடனடியாக விசாரணைகள் இடம்பெற வேண்டும் புத்தசாசன மற்றும் மதவிவகார அமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தென்னிலங்கையிலிருந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட பிக்குகள் இந்த பகுதிகளுக்கு செல்வதற்கு தயாராக இருந்ததை அறிந்த அரசு இவ்வாறு செய்ததாகவும் புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments: