லெபனானுக்கு எதிரான இலங்கை அணியின் 2022 பிஃபா(FIFA) உலகக் கிண்ண தகுதிகாண் போட்டி கொழும்பு குதிரைப்பந்தயத் திடல் மைதானத்தில் மழைக்கு மத்தியில் செவ்வாய்க்கிழமை (15.10.2019) இரவு நடைபெற்றது.
போட்டியானது இரு அணி வீரர்களுக்கும் கடுமையாக இருந்ததோடு குறிப்பாக லெபனான் வீரர்கள் தமது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்த போராடினர். மோசமான காலநிலை மத்தியிலும் லெபனான் வீரர்கள் இலங்கை அணிக்கு நெருக்கடி கொடுத்தனர்.
முதல் பாதியை விடவும் இலங்கை அணி இரண்டாவது பாதியை சற்று சிறப்பாக ஆரம்பித்தது. இலங்கையின் தாக்குதல் ஆட்டம் ஒருங்கிணைப்பு இன்றி இருந்ததோடு அணியின் பந்து பரிமாற்றமும் இலக்கு இன்றி இருந்ததால் எதிரணிக்கு சவால் கொடுக்க முடியவில்லை.
லெபனானுக்கு எதிரான 2022 பிஃபா(FIFA) உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் இலங்கை அணி 3-0 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியை சந்தித்தது.
இலங்கை அணி பிஃபா(FIFA) உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. வெளிநாட்டில் 3 போட்டிகள் உட்பட இலங்கை அணிக்கு இன்னும் நான்கு போட்டிகள் எஞ்சியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments: