தபால் மூலம் வாக்களிப்பதற்காக விண்ணப்பித்த 7 இலட்சம் வாக்காளர்களின் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானர்களை தெரிவு செய்யும் பணி இன்றுடன் பூர்த்தி செய்யப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் திட்டப்பணிப்பாளர் சன்ன பி.டி.சில்வா தெரிவித்தார்.
மேலும் , தபால் மூலம் வாக்களிப்பதற்காக விண்ணப்பித்தவர்கள் ஒக்டோபர் 31 ஆம் திகதி, நவம்பர் 01 ஆம் திகதி ஆகிய தினங்களில் வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் திட்டப்பணிப்பாளர் தெரிவித்தார்.
குறிப்பிட்ட இரண்டு தினங்களில் வாக்களிக்க முடியாதோர் நவம்பர் 07 ஆம் திகதி அருகில் உள்ள தேர்தல் தெரிவு அத்தாட்சி அலுவலகத்தில் வாக்களிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்தற்கான வாக்காளர் அட்டைகள் ஒக்டோபர் 18 ஆம் திகதி தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: