News Just In

10/15/2019 03:14:00 PM

கல்வி அமைச்சின் அகில இலங்கை ஆங்கில மொழி மற்றும் நடனப் போட்டிகள் - 2019

கல்வி அமைச்சினால் நடத்தப்படும் அகில இலங்கை ஆங்கில மொழி மற்றும் நடனப் போட்டி போட்டிகள் ஒக்டோபர் 19, 20, 26 ஆம் திகதிகளிலும் நவம்பர் 02 ஆம் திகதியும் கொழும்பு-03 இல் அமைந்துள்ள தேஸ்டன் வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

2019 ஆம் ஆண்டு மாகாண மட்டத்தில் நடைபெற்ற ஆங்கில மொழியில் பிரதி எழுதுதல், கவிதை எழுதுதல், சொல்வதெழுதுதல், பாடல், பேச்சுப் போட்டி மற்றும் நடனப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்காக அகில இலங்கை ரீதியில் இறுதிப் போட்டியாக இந்த போட்டிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: