நாடு தழுவிய ரீதியில் பொது மக்களிடமிருந்து கோரப்படும் போதைப்பொருள்
ஒழிப்பிற்கான ஒத்துழைப்பு
(ஏ.எச்.ஏ. ஹுஸைன
திட்டமிடப்பட்ட போதைப்பொருள் சோதனைகளுக்கான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு பொலிஸ் திணைக்களம் பொது மக்களின் ஒத்துழைப்பை நாடி நிற்கின்றது.
அதற்கமைவாக நாடு தழுவிய ரீதியில் தகவல்களை வழங்கக் தொலைபேசி எண்களை கூடிய பொலிஸ் தலைமையகம் அறிமுகம் செய்துள்ளது.
இதன்மூலம்;, நாடடின் எப்பாகத்திலேனும் பல்வேறு பகுதிகளில் ஹெரோயின், ஐஸ், கொக்கைன், கஞ்சா உற்பத்தி, விற்பனை, பாவனை தொடர்பாக புதிய முறைகள் மூலம் பொதுமக்கள் நேரடியாக பிராந்திய பிரிவு அதிகாரிகளுக்கு தகவல்களை வழங்க முடியும்.
யாழ்ப்பாணம் 071-8591327
மட்டக்களப்பு 071-8591127
திருகோணமலை 071-8591170
வவுனியா 071-8591340
மன்னார் 071-8591363
முல்லைத்தீவு 071-8591374
கிளிநொச்சி 071-8591347
கொழும்பு மத்திய 071-8591551
கண்டி 071-8591042
2024, 2025ஆம் ஆண்டுகளில் பொலிஸாருக்கு பொதுமக்கள் வழங்கிய ஆதரவு பாராட்டத்தக்கது, மேலும் 2026ஆம் ஆண்டில் போதைப்பொருள் ஒழிப்பு திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் பொதுமக்கள் தொடர்ந்தும் பொலிஸ் அதிகாரிகளுக்கு தகவல்களை வழங்கலாம், பொதுமக்களால் வழங்கப்படும் தகவலின் ரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் என்றும் பொலிஸ் தலைமையக அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: