News Just In

1/20/2026 05:51:00 PM

யாழ் மருத்துவ பீட போலி தென்னிலங்கை யுவதிக்கு நேர்ந்த கதி

யாழ் மருத்துவ பீட போலி தென்னிலங்கை யுவதிக்கு நேர்ந்த கதி



யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்திற்கு, எவ்வித அனுமதியும் பெறாது, வகுப்புகளில் பங்கேற்றிருந்த யுவதி ஒருவர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மருத்துவ பீடத்தின் முதலாம் வருட மாணவர்களுக்கான பயிற்சி செயற்பாட்டின் போது குறித்த யுவதி அடையாளம் காணப்பட்டதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தின் பீடாதிபதி தெரிவித்தார்.

அதன்படி, குறித்த யுவதி தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அறியப்படுத்தி, அடுத்தகட்ட நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


மொனராகலை பகுதியைச் சேர்ந்த குறித்த யுவதி, பொய்யான பதிவு இலக்கமொன்றை சமர்ப்பித்து, மாணவிகளின் விடுதியிலும் அறையைப் பெற்றுத் தங்கியிருந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்ததாக, அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் மாணவர்கள் வகுப்பறைகளுக்குள் அனுமதிக்கப்படுவதற்கான புதிய அணுகுமுறையை முன்னெடுக்கவுள்ளதாகவும் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பீடாதிபதி தெரிவித்தார்.

No comments: