News Just In

6/19/2025 08:04:00 AM

ஈரானின் முக்கிய பலத்தை தாக்கவுள்ள அமெரிக்க குண்டுகள்.. வெளியான திடுக்கிடும் தகவல்

ஈரானின் முக்கிய பலத்தை தாக்கவுள்ள அமெரிக்க குண்டுகள்.. வெளியான திடுக்கிடும் தகவல்



30,000 இறாத்தல்  எடையுள்ள குண்டுகளால் ஈரானின் ஃபோர்டோ அணுசக்தி நிலையத்தை அழிக்க முடியுமா என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது இராணுவ ஆலோசகர்களிடம் கேட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மாசிவ் ஆர்ட்னன்ஸ் பெனட்ரேட்டர்கள் என்று அழைக்கப்படும் பதுங்கு குழி குண்டுகள் அமெரிக்க ஆயுதக் கிடங்கில் உள்ளன.

ஆனால் குண்டுகளை நிலைநிறுத்த தேவையான ஆயுதங்களோ அல்லது குண்டுவீச்சு விமானங்களோ இஸ்ரேலிடம் இல்லை.

இஸ்ரேலிய வான்வழி ஆயுதங்களுக்கு எட்டாத ஆழத்தில் ஃபோர்டோ நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ளது.

ட்ரம்ப் அவ்வளவு உறுதியாக இருக்கிறாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், ஃபோர்டோவுக்கு எதிராக குண்டுகள் ஏவப்படக் கூடும் என்று பென்டகனின் அதிகாரிகள் ட்ரம்பிடம் தெரிவித்ததாக கூறப்படுகின்றது.

இந்த குண்டுகள் இதுவரை போரில் ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை, சோதனைகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன.

No comments: