தமிழரசுக் கட்சியின் பேச்சாளராக யாரும் நியமனம் செய்யப்படவில்லை
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் நியமனம் செய்யப்பட்டாரே தவிர இலங்கை தமிழரசுக் கட்சியின் பேச்சாளராக யாரும் நியமனம் செய்யப்படவில்லையென இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழு பேச்சாளருமான ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
13ஆவது திருத்தச் சட்டம் என்பது மீளப்பெறப்படமுடியாது என்பதை வலியுறுத்தவில்லை. அதனால் சமஸ்டி முறையான கூட்டாட்சி முறைதான் இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வினை தரும் என்பதை சுட்டிக்காட்டுகின்றோம். அந்த தீர்வினை எட்டும் வரைக்கும் 13ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்படும் சூழ்நிலையினை இந்தியா உருவாக்கவேண்டும். இந்தியா அதற்கான அழுத்ததினை வழங்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.
மட்டு. ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்
12/22/2024 04:45:00 PM
தமிழரசுக் கட்சியின் பேச்சாளராக யாரும் நியமனம் செய்யப்படவில்லை!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: