News Just In

12/12/2025 10:57:00 AM

கரையொதுங்கிய சடலத்தை இனம் காணுமாறு பொலிஸார் வேண்டுகோள்.

கரையொதுங்கிய சடலத்தை இனம் காணுமாறு பொலிஸார் வேண்டுகோள்


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
இலங்கையில் ஏற்பட்ட இயற்கை இடர் காரணமாக ஆண் ஒருவரின் ஒருவரது சடலம் கரையோதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாகரை பொலிஸ் பகுதிக்குட்பட்ட கஜுவத்தை கடற்படை முகாமிற்கு பின்னாலுள்ள கடற்கரையை அண்டிய பகுதியில் 05.12.2025 அன்று ஆணின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டு தற்போது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்தப் பகுதியிலாவது பிற மாவட்டங்களில் உள்ளவர்கள் யாராவது காணாமல் போனால் தயவு செய்து இத்தகவலைத் தெரியப்படுத்தி சடலத்தை அடையாளம் காண உதவுமாறு திடீர் மரண விசாரணையாளர் சபாபதிபிள்ளை இராசகுமார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


குறிப்பிட்ட 21 நாட்களுக்குள் சடலம் இனம் காணப்படா விட்டால் அரசாங்கச் செலவில் அடக்கம் செய்யப்பட ஏற்பாடுகள் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: