திருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதி சீனக்குடா பகுதியில் புது மாப்பிள்ளை ஒருவருக்கு நேர்ந்த பெரும் துயரம்
திருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதி சீனக்குடா பகுதியில் நேற்று (09) இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் கிண்ணியா குறிஞ்சாக்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய திருமணம் முடித்து சில மாதங்களான இளைஞர் உயிரிழந்ததாகவும் தெரியவந்துள்ளது.
திருகோணமலை - ஜமாலியாவில் அமைந்துள்ள தனது பெற்றோரின் வீட்டிலிருந்து, கிண்ணியாவிலுள்ள தனது மனைவியின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது, இராணுவ வாகனம் ஒன்று மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
No comments: