
இலங்கையில் ஏற்பட்ட தித்வா சூறாவளி காரணமாக மலையகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மலையத்தில் அதிகளவான உயிர்ச் சேதத்தை ஏற்படுத்திய மண்சரிவு காரணமாக மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் பதுளையில் நேற்றிரவு மீண்டும் மண்சரிவு ஏற்பட்டமையினால் அந்தப் பகுதி மக்கள் பாதுகாப்பு தேடி தப்பிச் சென்றுள்ளனர்.
எகரிய, மீகொல்ல, மேல் பகுதியில் இன்று அதிகாலையில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்தப் பகுதி மக்கள் அதிகாலை 4 மணியளவில், விளையாட்டு மைதானத்தில் ஒன்றுக் கூடியதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments: