News Just In

12/10/2025 05:36:00 AM

16 வயதுக்குட்பட்டவர்கள் இனி சமூக வலைத்தளங்களை பயன்படுத்த முடியாது!

16 வயதுக்குட்பட்டவர்கள் இனி சமூக வலைத்தளங்களை பயன்படுத்த முடியாது!



அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகிறது.

சமூக ஊடகங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், குழந்தைகளின் மனம், உடல்நலம் பாதிக்கப்படுவதாக அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் கவலை தெரிவித்துள்ளார்.

இதைத் தடுக்க, 'ஒன்லைன் பாதுகாப்பு திருத்தச் சட்டம் - 2024' என்ற சட்டத்தை அவர் கொண்டு வந்துள்ளார்.

இந்த சட்டத்தின்படி, 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், 'பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டொக், எக்ஸ், யூடியூப், ஸ்னாப்சாட்' போன்ற சமூக ஊடகங்களில் கணக்குகளை ஆரம்பிக்கவோ, பயன்படுத்தவோ முடியாது. இந்த தடை, இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகிறது.

16 வயதுக்கு உட்பட்டவர்களின் சமூக ஊடக கணக்குகளை நீக்க, 'டிக்டொக், எக்ஸ், மெட்டா' ஆகிய நிறுவனங்களுக்கு உத்தரவிட்ட அவுஸ்திரேலிய அரசாங்கம், புதிய கணக்கு ஆரம்பிப்போரின் வயதைச் சரிபார்க்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

தடையை மீறும் நிறுவனங்களுக்கு, 297 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என அவுஸ்திரேலிய அரசாங்கம் எச்சரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 16 வயதிற்குட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதித்த முதல் நாடாக அவுஸ்திரேலியா பதிவாகியுள்ளது.

No comments: