அகில இலங்கைக் கம்பன் கழகம் தனது வெளிநாட்டு உறுப்பினர்களிடம் உதவி பெற்று வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் புரிந்து வருகிறது. அந்த வகையில் முதல் கட்டமாக கிழக்கிலங்கை மக்களுக்குத் துணை புரிவதற்காக, ரூபா மூன்று இலட்சத்திற்கான காசோலை கழக பெருந்தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி ஜெ.விஸ்வநாதன் அவர்களால் பாராளுமன்ற உறுப்பினர் இரா . சாணக்கியனிடம் வழங்கப்பட்டது. இவ் அனர்த்த நிவாரண தொகையில் இருந்து மட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்த மாவடிவேம்பு கிராமத்தைச் சேர்ந்த 100 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.
கம்பன் கழகத்தின் மட்டக்களப்பு வெள்ள நிவாரண நடவடிக்கைகள் மட்டக்களப்பில்..!
No comments: