News Just In

9/22/2024 02:03:00 PM

கிழக்கு பல்கலைக்கழகத்தில் "தொழில்நுட்ப வளாகம் " திறப்பு விழா

கிழக்கு பல்கலைக்கழகத்தில் "தொழில்நுட்ப வளாகம் " திறப்பு விழா
(அஸ்ஹர் இப்றாஹிம்)



இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 'தொழில்நுட்ப வளாகம்” மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது.இத் தொழில்நுட்ப வளாகமானது, கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் அவர்களின் முயற்சியில், த கேற் நிறுவன அனுசரனையுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வளாக திறப்பு விழாவில், இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பிரதித் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன பி.உடவத்த பிரதம விருந்தினராகவும், உபவேந்தர் மற்றும் பணிப்பாளர்களுக்கான குழுவின் தலைவரும் இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழக உபவேந்தருமான பேராசிரியர் சஞ்ஜீவனி கினிகத்தர மற்றும் இலங்கை வவுனியா பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் அருளம்பலம் அற்புதராஜா ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்தனர்.




இத் தொழில்நுட்ப வளாகம் தொழில் முயற்சியாளர்களின் வருமானத்தை அதிகரிக்கவும், சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களின் வருமானத்தை நிலைபேறானதாக மேம்படுத்தும் ஒரு காப்பகமாகவும் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.


No comments: