News Just In

7/18/2024 11:08:00 AM

கிழக்கு மாகாண மட்ட பாடசாலைகளுக்கிடையே இடம்பெற்ற கபடி போட்டியில் நிந்தவூரை சேர்ந்த இரு பாடசாலைகள் தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்களை தமதாக்கிக் கொண்டது!



(எஸ்.அஷ்ரப்கான்)
நிந்தவூர் பொது மைதானத்தில் 2024.07.16,17 (செவ்வாய், புதன்) ஆகிய திகதிகளில் இடம்பெற்ற கபடி போட்டியில் நிந்தவூர் மதீனா 17 மற்றும் 20 வயது பிரிவுகளில் தங்கங்களை பெற்று சம்பியன் மகுடத்தை தனதாக்கிக் கொண்டது.

இதேவேளை அல் அஷ்றக் தேசிய பாடசாலையும் 17 மற்றும் 20 வயது பிரிவுகளில் வெள்ளிப்பதக்கத்தினைப் பெற்று மாகாணத்தில் இரண்டாம் நிலையை பெற்றுக்கொண்டுள்ளது

No comments: