News Just In

7/18/2024 11:10:00 AM

மாளிகைக்காடு மனிநேய உதவியாளர்கள் அமைப்பின் நிர்வாக கூட்டம்!



மாளிகைக்காடு மனிநேய உதவியாளர்கள் அமைப்பின் 2024- 2026 ஆண்டிற்கான நிர்வாக கூட்டம் அமைப்பின் தலைவர் என்.எம்.ரிபின் தலைமையில் இன்று (17) அமைப்பின் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இதன்போது அமைப்பின் எதிர்கால வேலைத்திட்டங்கள், முன்னெடுப்புகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது டன் புதிய நிர்வாகமும் தெரிவு செய்யப்பட்டது. அமைப்பின் போசகர் கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணைக்குழு உறுப்பினரும், மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் செயலாளருமான யூ.எல். நூருல் ஹுதா முன்னிலையில் தலைவராக மீண்டும் என்.எம்.ரிபின் தெரிவு செய்யப்பட்டார். பிரதித் தலைவராக ஜெ.எம். ஹசான் தெரிவு செய்யப்பட்டார்.

மேலும் செயலாளராக எச்.எம்.நப்ரினும், உதவி செயலாளராக ஜெ.ஏ.ஆஸிமும், பொருளாளராக ஏ.எம்.எம். ருஸ்தியும், கணக்கு பரிசோதகராக ஏ.எம்.ஆக்கிப்பும் தெரிவு செய்யப்பட்டதுடன் ஊடக இணைப்பாளர்களாக எஸ்.எம்.சிமாம் மற்றும் எம்.எம்.அப்ரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மாளிகைக்காடு மனிதாபிமான உதவியாளர்கள் அமைப்பானது பொதுநல வேலைத்திட்டங்களில் முழுமையாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: