நூருல் ஹுதா உமர்
யூ.எஸ்.எப். ஸ்ரீலங்கா அமைப்பின் 09 வது ஆண்டை முன்னிட்டு கல்முனை அஷ்ரப்ஞாபகார்த்தவைத்தியசாலையின்நிலவும்இரத்தப்பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யுமுகமாக மயோன் எடியுகேசன் எயிட் பூரண அனுசரனையுடன் “உதிரம் கொடுத்து உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் இரத்தான முகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் 112 பேர்கள் இரத்ததானம் வழங்கியதுடன் நிகழ்வில் பிரதம அதிதியாக மயோன் குரூப் ஆப் கம்பெனி நிறுவனத்தின் பணிப்பாளரும் மயோன் எடியுகேசன் எயிட் தலைவருமான பிரபல சமூக சேவையாளர் றிஸ்லி முஸ்தபா கலந்து கொண்டார்.
மேலும் விசேட அதிதிகளாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் டாக்டர் சஹீலா இஸ்ஸதீன், அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம். எப். ரஹ்மான், சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தின் பொறுப்பதிகாரி, அமைப்பின் போசகர்கள், ஆலோசகர்கள் மற்றும் அமைப்பின் செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்..
No comments: