தமிழர்கள் தொடர்பாக வழங்கப்பட்ட பல உறுதிமொழிகளை நிறைவேற்றும் காலம் வந்துவிட்டதாக பிரித்தானிய தொழிற்கட்சி தமிழ் பிரிவுத் தலைவர் சென்.கந்தையா தெரிவித்தார்.
.இது குறித்து மேலும் தெரிவிக்கையில் , ''பிரித்தானியாவின் தொழிற்கட்சியை சேர்ந்த முன்னிலைத் தலைவர்கள், நிழல் வெளியுறவு துறை அமைச்சர் டேவிட் லெமி மற்றும் பல அமைச்சரவை அமைச்சர்களும் தமிழர்கள் தொடர்பாக பல உறுதிமொழிகளை வழங்கியிருந்தனர்.
தற்போது அவற்றை நிறைவேற்றும் காலமும் வந்துவிட்டது. பிரித்தானியா தொழிற்கட்சியின் வெற்றியை ஒரு பொறுப்பு வாய்ந்த விடயமாகவே நாங்கள் பார்க்கின்றோம்.
ஏனெனில் நாங்கள் தமிழர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கே முக்கியத்துவம் வழங்குவோம் என கூறினார்
No comments: