News Just In

6/07/2023 03:57:00 PM

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்!





அபு அலா -

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று (07) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

அவை இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கபில அத்துகோரால மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட அரச அதிபர், திணைக்கள அதிகாரிகள் மற்றும் உயர்மட்ட அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, மாகாண அபிவிருத்திகள் தொடர்பாகவும், பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.


No comments: