News Just In

3/18/2023 06:15:00 PM

ICBT கம்பஸ் இனால் நடாத்தப்பட்ட டிப்ளோமா விருது வழங்கும் நிகழ்வு!

மட்டக்களப்பு - கல்லடியில் அமைந்துள்ள ICBT கம்பஸ் இனால் டிப்ளோமா விருது வழங்கும் நிகழ்வானது இன்று (18.03.2023) கல்லடி சன்சைன் கிராண்ட் ஹோட்டலில் (Sunshine Grand Hotel) மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.

மேற்படி நிகழ்வானது கல்லடி ICBT கம்பஸ் நிலைய முகாமையாளர் டிலுக்சாந் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிதிகளாக ICBT கம்பஸ் இன் CEO கலாநிதி. சம்பத் கன்னங்கர அவர்களும் ICBT கம்பஸ் இன் CAO சந்திரமோகன் சந்திரசேகரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் 05 டிப்ளோமா கற்கை நெறிகளான Diploma in Business Administration, Diploma in Human Resource Management, Diploma in Information and Communication Technology, Diploma in English மற்றும் Diploma in Psychology and Counseling ஆகிய பாட நெறிகளில் தோற்றி வெற்றிகரமாக பூர்த்திசெய்த 169 மாணவர்கள் டிப்ளோமா சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். அத்தோடு கல்லடி ICBT கம்பஸ் இன் ஊழியர்கள் மற்றும் அதிதிகளும் கெளரவிக்கப்பட்டனர்.

மேற்படி நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.



























No comments: