News Just In

7/14/2026 03:42:00 PM

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுபோக நெல் கொள்வனவிற்கான பூர்வாங்க ஏற்பாடுகள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுபோக நெல் கொள்வனவிற்கான பூர்வாங்க ஏற்பாடுகள்


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை சிறுபோகத்தில் விளைவிக்கப்பட்ட நெல்லை விவசாயிகளிடமிருந்து நியாயமான விலைக்கு கொள்வனவு செய்வதற்கான பணிகளை நெல் சந்தைப்படுத்தல் சபை முன்னெடுத்து வருகின்றது.

இதற்கான களஞ்சிய சாலை வசதிகளை முன் கூட்டியே ஆயத்தம் செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதியின் அறிவித்தலுக்கமைவாக இடைத்தரகர்களின் தலையீடின்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல்கொள்வனவு இட்ம்பெறவுள்ளதாக மட்டக்களப்பு விவசாய அபிவிருத்திக்கான இணைப்பாளர் கே. திலகநாதன் தெரிவித்டதுள்ளார். அவர் தலைமையிலான குழுவினர் நேரடியாக நெல் கொள்வனவுக்கான முன் ஆயத்தப் பணிகளை கண்காணித்து வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலுப்படிச்சேனை, வவுணதீவு, முள்ளாமுனை, மணல்பிட்டி, வெல்வாவெளி, தும்பங்கேணி ஆகிய பகுதிகளில் எதிர்வரும் தினங்களில் நெல்கொள்வனவில் ஈடுபடுவதற்கு 10 அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆயத்தமாகவுள்ளனர்.

இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் 38,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் சிறு போக நெல் செய்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஏற்கெனவே, 6,000 ஹெக்டேயரில் நெல் அறுவடை நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள நெல் வயல்களில் அறுவடைகள் கிரமமாக இடம்பெற்று வருகின்றன

No comments: