மட்டக்களப்பில் விழிப்புணர்வு
மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எல் நினோ தாக்கத்தை எதிர்கொள்வதற்கு ஏற்ற வகையில் விழிப்புணர்வூட்டும் தெளிவூட்டல்கள் இடம்பெற்றன.
இந்த விசேட கூட்டம் எல் நினோ மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டமாக துறைசார் நிபுணர்கள் பங்கேற்புடன் இடம்பெற்றது.
எல் நினோ காலநிலை தாக்கங்களை முன்னெச்சரிக்கையுடன் எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களை வலுப்படுத்தும் நோக்கில், மாவட்டச் செயலாளர் ஜே. எஸ். அருள்ராஜ் தலைமையில், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் புதிய கேட்போர் கூடத்தில் இக்கூட்டம் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் ஏ. எஸ். எம். ஸியாத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் எல் நினோவின் செல்வாக்கும் அதன் தாக்கங்களை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களும் தொடர்பாக இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கே. ராஜேந்திரம் தெளிவு படுத்தினார்.
இதன்போது சுப்பர் எல் நினோ குறித்து விளக்கமளித்த பேராசிரியர், பசுபிக் பெருங்கடலின் மத்திய பகுதியிலும் கிழக்குப் பகுதியிலும் கடல் மேற்பரப்பு வெப்பநிலை வழமையை விட அதிரிப்பதனால் ஏற்படும் இந்த இயற்கை நிகழ்வை இலங்கையிலும் உணர வேண்டிய நிலை ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதனால். எல் நினோ ஏற்படும் காலங்களில் இலங்கையின் அதிகரித்த மழைப்பொழிவும் வெப்பநிலையில் மாற்றமும் ஏற்படக்கூடும் என்றும், அதன்படி சில பகுதிகளில் வறட்சி நீடிக்கலாம்; சில காலங்களில் இயல்பை விட அதிக மழை பெய்யவும் வாய்ப்புள்ளது. இதனால் விவசாயம், குடிநீர் வளம், நீர்மின் உற்பத்தி, சுற்றுச்சூழல், மக்களின் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்படலாம். எனவே, காலநிலை முன்னறிவிப்புகளை கவனித்து, நீர் வளங்களை சிக்கனமாகப் பயன்படுத்தி, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் அவசியமாகும்
இந்த நிலை இலங்கைக்கு புதிய விடயம் அல்ல என்றும் குறிப்பிட்ட பேராசிரியர் வழமைக்கு மாறான மழை வீழ்ச்சி அதிகம் ஏற்படும்போது அதனை முகாமைத்துவம் செய்வதற்கு மட்டக்களப்பு மாவட்டம் தயாராக இருக்க வேண்டும் என்பது குறித்தும் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள், விவசாயத் திணைக்கள, விவசாய விரிவாக்க அதிகாரிகள், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிராந்திய முகாமையாளர், இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இதய நோய் நிபுணர், மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக, கைத்தொழில் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு துறைசார் அதிகாரிகள், நிபுணர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments: