ஈரான் துறைமுகங்கள் மற்றும் கரையோரப் பகுதிகளுக்குச் செல்லும் அல்லது அங்கிருந்து வரும் கப்பல்களைக் கட்டுப்படுத்தும் வகையில், அமெரிக்கா மீண்டும் கடற்படை முற்றுகையை அமுல்படுத்த உள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) உறுதிப்படுத்தியுள்ளது.
முற்றுகை விதிமுறைகளை மீறாத அனைத்து வணிக மற்றும் மனிதாபிமான உதவி வழங்கும் கப்பல்களின் போக்குவரத்திற்கு அமெரிக்க இராணுவம் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த ஏப்ரல் 13 முதல் ஜூன் 18 வரை இந்த முற்றுகை அமுலில் இருந்தது.அந்த இரண்டு மாத காலத்தில், சுமார் 140 கப்பல்கள் வழிகாட்டப்பட்டு, விதிமுறைகளை மீறிய 9 கப்பல்கள் முடக்கப்பட்டன.
மேலும், 50க்கும் மேற்பட்ட மனிதாபிமான உதவி வழங்கும் கப்பல்கள் அனுமதிக்கப்பட்டன.
ஈரான் மீதான இந்த இராணுவ மற்றும் பொருளாதார அழுத்தமானது, பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
No comments: