News Just In

7/14/2026 12:07:00 PM

இலங்கையில் டெங்கு தொற்றுக்குள்ளான 70 ஆயிரம் பேர்! நாளுக்கு நாள் அதிகரிக்கும் எண்ணிக்கை..

இலங்கையில் டெங்கு தொற்றுக்குள்ளான 70 ஆயிரம் பேர்! நாளுக்கு நாள் அதிகரிக்கும் எண்ணிக்கை..



நாட்டில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 70ஆயிரத்தை நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று நள்ளிரவு நிலவரப்படி, நாட்டில் டெங்கு தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை, 69951ஆக பதிவாகியுள்ளது.

இவர்களுள் மேல் மாகாணத்தில் அதிகளவான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இதன்படி, மேல் மாகாணத்தில் மொத்தம் 36,795 டெங்கு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், தென் மாகாணத்தில், 10,955 தொற்றாளர்களும், சபரகமுவ மாகாணத்தில் 5,878 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர்.

இதேவேளை, இதுவரையான நாட்களில் கம்பஹா மற்றும் கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக அதிகமாக டெங்கு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் 14,464 டெங்கு தொற்றாளர்களும், கொழும்பு மாவட்டத்தில், 14,004 டெங்கு தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர்.

இதேவேளை வருடத்தின் இதுவரையான நாட்களில் கடந்த ஜூன் மாதம் மிக அதிகளவான டெங்கு தொற்றாளர்கள் நாட்டில் பதிவாகியுள்ளனர்.

21,538 டெங்கு தொற்றாளர்கள் ஜூன் மாதத்தில் பதிவாகியுள்ளதுடன், ஜூலை மாதத்தின் இதுவரையான நாட்களில், 14,572 டெங்கு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments: