பொதுமக்கள் அவசியம் இன்றி உணவுப் பொருட்களை சேமித்து வைக்கக் கூடாது என வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை தீவிரமடைந்ததன் காரணமாக உணவுப் பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளதுடன் பல உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையிலேயே அவசியம் இன்றி உணவுப் பொருட்களை அதிகமாக சேமித்து வைக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், நுகர்வோர் இவ்வாறு தேவையற்ற சேகரிப்புகளை மேற்கொண்டால், அது சந்தையின் இயல்பு நிலையை பாதிக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
No comments: