News Just In

3/10/2022 04:45:00 PM

மனித உடலை மொத்தமாக பொசுக்கும் ஆயுதம்: உக்ரைனில் புடின் கோரதாண்டவம்!


உக்ரைனில் மிக ஆபத்தான தெர்மோபரிக் ராக்கெட்டுகளை ரஷ்யா பயன்படுத்தியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.தெர்மோபரிக் ஆயுதத்தின் தாக்கம் என்பது மனித நுரையீரலை சிதைத்து பலி எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் என்பதுடன், அது மனித உடலை மொத்தமாக பொசுக்கும் திறன் கொண்டது எனவும் கூறப்படுகிறது.

மூன்று நாட்களில் உக்ரைனை கைப்பற்றிவிடலாம் என்ற திட்டத்துடன் களமிறங்கிய ரஷ்ய துருப்புகளுக்கு, உக்ரைன் துருப்புகளின் பதிலடி ஏமாற்றத்தை அளிக்க, இந்த ஆத்திரத்தில் ரஷ்யா தெர்மோபரிக் ராக்கெட்டுகளை பயன்படுத்தியதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

No comments: