News Just In

12/03/2021 06:48:00 AM

இலங்கையில் 9 வருடங்களுக்கு பின் மீண்டும் வந்த மலேரியா!

இலங்கையில் 9 வருடங்களுக்கு பின்னர் காலி, நெலுவ என்ற பிரதேசத்தில் மலேரியா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு மலேரியா தொற்றில் பாதிக்கப்பட்ட நபர் உகாண்டாவில் பணியாற்றி இருந்த நிலையில் மூன்று மாதங்களுக்கு முன்னர் இலங்கை திரும்பியதாக தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சந்திம சிரிதுங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த 27 ஆம் திகதி சனிக்கிழமை அவசர சுகயீனம் காரணமாக அவர், உடுகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதன்போது, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர் மலேரியாவினால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இலங்கையில் கடந்த 2012 ஆம் ஆண்டில் இறுதியாக மலேரியா நோயாளியொருவர் அடையாளம் காணப்பட்டிருந்தார்.

அதற்கு பின்னர், மூன்று வருட காலப்பகுதியில் மலேரியா நோயால் பாதிக்கப்பட்ட எவரும் அடையாளம் காணப்படாததால், இலங்கை மலேரியா நோயற்ற நாடாக 2016 ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பினால் அறிவிக்கப்பட்டது.

No comments: