News Just In

5/16/2021 09:01:00 AM

நேற்று மாத்திரம் கொரோனா தொற்றால் 20 பேர் உயிரிழப்பு- 2386 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...!!


இலங்கையில் மொத்தமாக ஒரு இலட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்று மாத்திரம் 2,386 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 140,471 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்யை தினம் பதிவான புதிய கொரோனா நோயாளர்களில் 2,371 பேர் புத்தாண்டு கொத்தணியுடன் தொடர்புடையோர் என்பதுடன், 15 பேர் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் ஆவர்.

அதேநேரம் கொரோனா தொற்றுக்குள்ளான 1,352 நோயாளர்கள் நேற்றைய தினம் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.

அதனால் குணமடைந்தோர் தொகையும் மொத்தமாக 117,220 ஆக அதிகரித்துளளது.

தற்சமயம் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 22,310 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதுடன், சந்தேகத்தில் 1,182 பேர் வைத்தியக் கண்காணிப்பிலும் உள்ளனர்.

இது இவ்வாறிருக்க கொவிட்-19 தொற்று தொடர்பில் மேலும் 20 உயிரழப்புகள் இடம்பெற்றிருப்பதாகவும் நேற்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைவாக இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பாக ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 941 ஆக அதிகரித்துள்ளது.



No comments: