News Just In

8/08/2020 10:04:00 PM

காத்தான்குடி பள்ளிவாயலில் பதட்டநிலை

இலங்கை முஸ்லீம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட ஹாபீஸ் நசீர் அஹமட் இன்று (8) மாலை காத்தான்குடி மெத்தைப் பள்ளிவாயலுக்கு உரை நிகழ்த்த வந்த போது, சிலர் அவரை வரவேண்டாம் என தடுத்ததையடுத்து பள்ளி வாயலுக்குள் அமளி துமளி ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு பதட்ட நிலை உருவானது.

இதையடுத்து ஹாபீஸ் நசீர் பள்ளிவாயலை விட்டு வெளியேறினார்.

அங்கு சென்ற இளம் ஊடகவியலாளர்முகம்மட் ஆதிப் தாக்கப்பட்டுள்ளார். இச் சம்பவத்தில் இவரது கையடக்க தொலைபேசி உட்பட சில உபகரணங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

No comments: