News Just In

8/08/2020 09:40:00 PM

அதிகரிக்கும் கொரோனா தொற்று

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த இருவரும் சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2841ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 254 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதோடு, குறித்த தொற்றிலிருந்து 2576 பேர் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்றுக்குள்ளாகி இலங்கையில் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 12 குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வீடுதிரும்பியுள்ளனர்.

இந்த நிலையில், இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 576 ஆக அதிகரித்துள்ளது.

இந்தநிலையில், 254 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments: