News Just In

2/19/2020 08:10:00 AM

சுவீடனில் சர்வதேச ரீதியாக நடாத்தப்படும் Stockholm Junior Water Prize போட்டி பற்றிய தெளிவூட்டல் கருத்தரங்கு!

சுவீடன் நாட்டினால் சர்வதேச ரீதியாக நடாத்தாப்படும் Stockholm Junior Water Prize போட்டிற்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.

இதன் முதற்கட்டமாக SJWP யின் தேசிய அமைப்பாளர்களான DreamSpace Academy யினால் Stockholm Junior Water Prize பற்றிய தெளிவூட்டல் கருத்தரங்கு எதிர்வரும் 25.02.2020 செவ்வாய்கிழமையன்று 10.30 தொடக்கம் 12.00 வரை சரவணா வீதியில் அமைந்துள்ள DreamSpace Academy யில் நடைபெறவுள்ளது.

இப் போட்டியானது நீரினைப் பாதுகாத்தல் மற்றும் நீரினை நிலைத்திருக்கச் செய்தல் தொடர்பான கருப் பொருளை அடிப்படையாக் கொண்டமைவதுடன் இதற்காக பதினைந்து தொடக்கம் இருபது வயது வரையுள்ள இளைஞர்களே தங்களது புதிய கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சிகளை விண்ணப்பிக்க முடியும்.
போட்டியானது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் சுவீடன் நாட்டின் தலைநகரில் நடைபெறவிருப்பதுடன் முப்பதிற்கும் மேற்பட்ட நாடுகள் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலதிக தகவல்களுக்கு :
ந.வித்தியாகரன்
075 41 14 487
065 222 65 25

No comments: