அரச நெல் கொள்வனவு தொடர்பான விசேட கூட்டம் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தலைமையில் இன்று நடைபெற்றது.
பிரதேச செயலக ரீதியாக விவசாயிகளின் நெல்லை எவ்வாறு கொள்வனவு செய்வது, கவனத்தில் கொள்ள வேண்டிய நடைமுறைகள் உட்பட பல விடயங்கள் இதன் போது கலந்துரையாடப்பட்டன.
இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.அருந்தவராஜா, மாவட்ட உதவி அரசாங்க அதிபர் என். பிரதீபன், மாவட்ட விவசாய பணிப்பாளர் எம்.குகதாசன், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கே. பரமேஸ்வரன், பிரதேச செயலாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
2/19/2020 08:43:00 AM
Home
/
உள்ளூர்
/
திருகோணமலை
/
மாவட்ட செயலகம்
/
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அரச நெல் கொள்வனவு தொடர்பான விசேட கூட்டம்
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அரச நெல் கொள்வனவு தொடர்பான விசேட கூட்டம்
Subscribe to:
Post Comments (Atom)



No comments: