News Just In

2/18/2020 08:40:00 PM

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விடயங்கள் மறைக்கப்பட்டுள்ளது!?-பேராயர் மெல்கம் ரஞ்சித்

கடந்த ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக மேற்கொள்ளப்படும் விசாரணைகள் திருப்திகரமாக இல்லையென பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இன்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.

நாட்டு மக்களுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விடயங்களை அறிந்துகொள்ளும் உரிமை உண்டெனவும், ஆணைக்குழுக்களின் அறிக்கைகளில் தாக்குதல் தொடர்பாக பதிவாகியுள்ள விடயங்கள் மறைக்கப்பட்டுள்ளது எனும் எண்ணம் தமக்கு ஏற்பட்டுள்ளதாகவும் பேராயர் தெரிவித்தார்.

No comments: