
தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கிடையே Amcor நிறுவனம் நடாத்திய சினேகபூர்வ கிரிக்கெட் போட்டி 15/02/2020 அன்று மட்டக்களப்பு புளியந்தீவு பாட்டாளிபுரம் மைதானத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநாகர ஆணையாளர் திரு.கே.சித்திரவேல் அவர்கள் கலந்து கொண்டார். அத்துடன் அம்கோர் நிறுவனத்தின் பணிப்பாளர் திரு.ப.முரளிதரன் மற்றும் அம்கோர் நிறுவனத்தின் நிதி நிர்வாக பணிப்பாளர் திரு.துமிந்த பெரேரா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இப் போட்டியில் 12 நிறுவனங்கள் அடங்கலாக 10 அணிகள் பங்குபற்றின .இப் போட்டியில் வெற்றியிட்டி 1ம்,2ம்,3ம் இடங்களை பெற்ற அணிகளுக்கு AMCOR நிறுவனத்தினால் வெற்றி கிண்ணங்களும், பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.
போட்டிகளின் முடிவில் 1ம் இடம் Meesan srilanka, 2ம் இடம்:- FPA, 3ம் இடம்:- AMCOR ஆகிய நிறுவனங்கள் பெற்றுக்கொண்டன.
இப் போட்டியில் ADT & YCRO, LIFT & INAYAM, SCOPE GLOBAL, HABITAT, MEESAN SRILANKA, VIMOCHANAM, YMCA, AMCOR, FPA, AU LANKA ஆகிய நிறுவனங்கள் பங்குபற்றியிருந்தன.
தேசிய தன்னார்வ தொண்டு நிறுவனமாகிய AMCOR நிறுவனம் இப் போட்டியினை தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கிடையே நட்புறவை வளர்க்கும் முகமாக ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.













No comments: