News Just In

2/29/2020 09:15:00 AM

அதிபர்-ஆசிரியர் சம்பள பிரச்சினைக்கு தேர்தலின் பின்னர் தீர்வு!

நீண்ட காலமாக தொடர்ந்துவரும் ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் கல்வித்துறை சார்ந்தவர்களின் சேவை நிலை மற்றும் சம்பளம் தொடர்பான பிரச்சினைகள் மீது அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதன்படி ஆசியர்கள், அதிபர்களின் சம்பள பிரச்சினைகளை முற்றாக தீர்ப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், ஆசிரியர் சேவையை ஒன்றிணைந்த சேவையாக மாற்றுவதற்கும் அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பொதுத்தேர்தலுக்கு பின்னர் கொண்டுவரப்படும் முதலாவது வரவு-செலவுத் திட்டத்தில் இதற்கான திட்டம் முன்மொழியப்படும் என குறிப்பிட்ட அவர்,

அண்மையில் உருவாக்கப்பட்ட தேசிய சம்பள ஆணைக்குழுவிற்கு அமைய சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு வழங்கப்படும் என்றார்.

No comments: