மாதுறுஓயா பெருக்கெடுத்துள்ளதால் மட்டக்களப்பு மாவட்டத்தில். வீதி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள கிரான் பிரதேச செயலகப் பிரிவிலடங்கும் கோராவளி பகுதிக்கு. தேசிய மக்கள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும். மாவட்ட பிரதேச அபிவிருத்தி குழுக்களின் தலைவருமான கந்தசாமி பிரபு. இன்று மாலை. நேரில் விஜயம் செய்தார்.
அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கிராம மக்களை நேரில் சந்திக்க சென்ற பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு. அப்பிரதேச மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் பற்றி கேட்டறிந்தார்.
அக்கிராமமக்கள். வெளி மாவட்ட ஆறுகள் பெருக்கெடுப்பதால். அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தும் கோராவெளி பிரதான வீதி துண்டிக்கப்பட்டிருப்பதாகவும். பாடசாலை மாணவர்கள் உட்பட வயதிபர்கள் வரையில்.நீண்ட காலமாக எதிர் நோக்கும். இப் பிரச்சினையை தீர்த்து வைக்க. அரசாங்கத்தின் ஏற்பாட்டில். தோணிகளை இணைத்து தண்ணீரை கடப்பதற்கு அவசர போக்குவரத்து வசதி செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
கிராம மக்களின் குறைகளை கேட்டறிந்த. பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு. எதிர்காலத்தில். பிரதேச மக்களின் போக்குவரத்து துண்டிக்காமல் இருக்க. உயர்ந்த வீதி அமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும். தற்போதைய பயன்பாட்டுக்காக. தோணிகளை இணைத்து வீதியை கடப்பதற்கு. நடவடிக்கை எடுப்பதாகவும். தெரிவித்தார்.
ஸ்தத்திலிருந்து. மாவட்ட அரசாங்க அதிபர். எஸ் .அருள்ராஜின் கவனத்துக்கு இப்ப பிரச்சனையை கொண்டு வந்து.விரைவாக. இக்கிராம மக்கள் வள்ளம்மூலம் பயணம் செய்வதற்கு ஏற்பாடு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
No comments: