News Just In

3/01/2026 03:29:00 PM

எரிபொருள் பதுக்கலுக்கு முற்றுப்புள்ளி: தீவிரமாக களமிறங்கிய பாதுகாப்புத் தரப்பினர்


எரிபொருள் பதுக்கலுக்கு முற்றுப்புள்ளி: தீவிரமாக களமிறங்கிய பாதுகாப்புத் தரப்பினர்




நாட்டில் தேவையற்ற முறையில் எரிபொருளைப் பதுக்கி வைப்பவர்களைக் கண்டறிவதற்காக பொலிஸ் மற்றும் புலனாய்வுப் பிரிவினரை உள்ளடக்கிய விசேட சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மத்திய கிழக்கு பதற்றங்களால் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சத்தைப் பயன்படுத்தி, எரிபொருளைப் பதுக்கி வைக்கும் நபர்களைக் கண்டறியும் பணிகளில் பாதுகாப்புத் தரப்பினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக நாடு தழுவிய ரீதியில் விசேட புலனாய்வுத் தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.

இவ்வாறான பதுக்கல் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் அல்லது அதற்குத் துணைபோகும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

No comments: