
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருமண்வெளியில் கடற்றொழிலுக்குச் சென்ற கடற்றொழிலாளர் ஒருவர் தோணியுடன் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குருமண்வெளி பகுதியில் வாவியில் கடற்றொழிலுக்குச் சென்ற குருமண்வெளியை சேர்ந்த குடும்பஸ்த்தரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
குருமண்வெளி காளிகோயில் வீதியில் வசித்து வந்த ஜோன் யோகநாதன் என்ற 42 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
இவரை தேடும் பணிகளில் கடற்படை அதிகாரிகள் இன்று மாலை வரையில் முயற்சிகளை முன்னெடுத்த போதிலும் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் குறித்த பிரதேச கடற்றொழிலாளர்களும் குருமண்வெளி வட்டார உறுப்பினர் உட்பட பலர் தேடுதல்களை முன்னெடுத்த போதிலும் அவர் சென்ற தோணியை கூட கண்டுபிடிக்க முடியவில்லையென தெரிவித்தனர்.
தற்போது வெள்ள நீர் வாவிக்குள் வடிவதன் காரணமாகவும் முகத்துவாரம் வெட்டப்பட்டு வெள்ள நீர் கடலுக்குள் செல்வதன் காரணதாகவும் மட்டக்களப்பு வாவியில் நீரோட்டம் அதிகமாக இருப்பதன் காரணமாக தேடுவதில் பல்வேறு சிக்கல்கள் எதிர்கொள்வதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments: