News Just In

12/20/2025 09:43:00 AM

களுவாஞ்சிகுடியில் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய வேன்; சாரதி வைத்தியசாலையில்!

களுவாஞ்சிகுடியில் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய வேன்; சாரதி வைத்தியசாலையில்!





மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் பகுதியில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் சாரதி காயமடைந்துள்ளார்.

நேற்று இரவு இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு பக்கமிருந்து கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேன், செட்டிபாளையம் பாடசாலைக்கு முன்னால் பயணிக்கும்போது, சாரதியின் கட்டுப்பாட்டிலிருந்து வீதியை விட்டு விலகி, வீதியோரமிருந்த அரச மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

வேன் விபத்தில் சிக்கிய சந்தர்ப்பத்தில் சாரதி மட்டுமே வேனில் பயணித்துள்ளதோடு விபத்தில் காயமடைந்த அவர் அவசர சேவை நோயாளர் காவுவண்டி மூலம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிஸார் முன்னெடுக்கின்றனர்

No comments: