News Just In

12/24/2025 04:41:00 PM

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி வசமுள்ள மட்டக்களப்பு!

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி வசமுள்ள மட்டக்களப்பு!



தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி வசமுள்ள மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேசபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேறியது.

கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் தலைமையில் நேற்று (23) நடைபெற்ற 7 ஆவது சபை அமர்வில் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டபோது 10 வாக்குகளால் நிறைவேறியது.

வரவு செலவு திட்டம் பகிரங்க வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது இதில் 10 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 06 உறுப்பினர்கள் நடுநிலையாகவும் வாக்களித்தனர் .தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் இன்றைய அமர்வில் கலந்து கொள்ளவில்லை.

19 உறுப்பினர்களைக் கொண்ட சபையில். தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி 7 உறுப்பினர்களும் முஸ்ஸிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 02 உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த 01 உறுப்பினர் ஆக 10 பேர் ஆதரவாக வாக்களித்தனர்.

இலங்கை தமிழ் அரசு கட்சியை சேர்ந்த 6 உறுப்பினர்கள் நடுநிலையாக வாக்களித்ததுடன் தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த 3 உறுப்பினர்கள் இன்றைய சபை அமர்வுக்கு கலந்து கொள்ளவில்லை.

குறித்த சபையில் பிரதி தவிசாளர் இலங்கை தமிழ் அரசு கட்சியில் சேர்ந்தவராவார்.

இதேவேளை சபையின் ஆட்சிக்கு தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சிக்கு ஆதரவாக தேசிய மக்கள் சக்தி ஆதரவளி த்திருந்தது. ஆனால் இன்றைய அமர்வில் கலந்து கொள்ளமையானது தமக்கு ஏமாற்றத்துடன் கவலையளிப்பதாக தவிசாளர் கருத்து தெரிவித்தார்.

தங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு இவர்கள் என்ன பதில் கூறப் போகின்றார்கள் என்ற கேள்விவியும் சபையில் எழுப்பப்பட்டது.

அத்துடன் இவர்கள் இன்றைய அமர்வில் கலந்து கொள்ளாமல் பிரிதொரு நிகழ்வுக்கு (பிரசாசக்தி கூட்டம் )செல்வதாக மூன்று பேரும் விடுமுறை கடிதம் வழங்கியுள்ளதாகவும் அவர்களுக்கான இன்றைய விடுமுறையானது சம்பளமற்ற விடுமுறையாக கணிக்கப்படுவதாகவும் சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அத்துடன் கட்சி பேதமின்றி வாகரைப் பிரதேச சபையின் 10 வட்டாரங்களுக்கும் மக்களின் நலன் கருதி நிதி ஒதுக்கீடுகள் இடம்பெறும் என்று தவிசாளர் கருத்து தெரிவித்தார்.

No comments: