இலங்கையினை பாரிய அனர்த்தம் தாக்கியபோதிலும் மக்கள் பல்வேறு இழப்புகளை எதிர்கொண்ட போதிலும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பினை அமைதியான முறையில் கொண்டாடுவதற்கு நாடு தயாராகி வருகிறது. அந்த வகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் நத்தார் பண்டிகை நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் களைகட்டியிருக்கின்றன.
நாளைய தினம் (25) பாலன் இயேசு கிறிஸ்துவின் பிறப்பினை அனுஷ்டிக்கும் முகமாக நத்தார் பண்டிகையினை அமைதியான முறையில் கொண்டாட மட்டக்களப்பு மாவட்ட மக்கள் தயாராகி வருகின்றனர்.
மட்டக்களப்பு நகருக்கு பெருமளவான மக்கள் வருகைதந்து கிறிஸ்மஸ் பண்டிகைக்கான பொருட்களை கொள்வனவு செய்வதையும் நகர்ப் பகுதியில் நத்தார் கீதங்கள் இசைக்கப்பட்டு, நத்தார் பாப்பா ஆடிப்பாடி மக்களை மகிழ்விப்பதையும் பார்க்கமுடிகிறது.
பல்வேறு தேவாலயங்களின் சார்பாக சிறுவர்கள், பெரியவர்கள் என பலர் பங்குபற்றும் நத்தார் கீத நிகழ்வுகளும் மக்கள் மத்தியில் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே, பேரிடரிலிருந்து நாடும் நாட்டு மக்களும் மிக விரைவில் மீண்டுவருவதற்கான பிரார்த்தனைகளும் நடத்தப்பட்டன.

No comments: