அரச தொழில்வாய்ப்புக்காக விண்ணப்பித்துள்ள அனைத்து வேலையில்லாத பட்டதாரிகளையும் அரச சேவையில் பயிலுனர்களாக இணைப்பதற்கான நியமன கடிதங்கள் இன்று வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அனைத்து பட்டதாரிகளுக்கும் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 01ஆம் திகதி தொடக்கம் 2021ஆம் ஆண்டு மார்ச் 01ஆம் திகதி வரையில் பயிற்சிகள் வழங்கப்படும். இக் காலப்பகுதியில் இவர்களுக்கு 20,000 ரூபா மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படும்.
ஒரு வருட காலம் இவர்களுக்கு பயிற்சிக் காலமாகும். இக் காலப்பகுதியில் 20,000 ரூபா சம்பளமாக வழங்கப்படும். அதன் பின்னர் அவர்கள் முறையான அரச சம்பளப் பட்டியலுக்குள் உள்வாங்கப்படுவார்கள்.
இந்த நியமனத்தில் இவர்கள் நியமனம் பெறும் இடத்தில் கட்டாயம் ஐந்து ஆண்டுகள் பணிபுரிய வேண்டும். அதன் பின்னரே இடமாற்றத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இதன்படி 50,000 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும் உயர் கல்வி அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்நியமனங்களில் 80% ஆனோர் பாடசாலைகளில் பயிலுனர் ஆசிரியர்களாக இணைக்கப்படவுள்ளதாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் சிரிபால ஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார்.
2/29/2020 08:15:00 AM
பட்டதாரிகளுக்கான நியமனங்கள் இன்று!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments: