
ஆரையம்பதி பிரதேச செயலாளர் விடுக்கும் அறிவித்தல்
அதிமேதகு ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவான ஒரு இலட்சம் வேலை வாய்ப்பினை வழங்குவதற்கான நேர்முகத் தேர்வு நாடளாவிய ரீதியில் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இடம்பெற்று வந்த நிலையில் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திலும் கடந்த 26.02.2020 ஆந் திகதி முதல் 28.02.2020 ஆம் திகதிவரை நேர்முகத்தேர்வுகள் நடைபெற்றது.
குறித்த மூன்று தினங்களிலும் நேர்முகத் தேர்விற்கு சமூகமளிக்க தவறிய மற்றும் உரிய ஆவணக்களை இதுவரை சமர்ப்பிக்க முடியாமல் போன விண்ணப்பதாரிகள் நாளைய தினம் (29) ஆந் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள நேர்முகத் தேர்வின்போதும் கலந்துகொள்ளலாமென குறித்த விடயம் தொடர்பில் ஊடக வியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி அவர்கள் இவ்வாறு கருத்துத் தெரிவித்திருந்தார்.


No comments: