மட்டு. ஆரையம்பதி பகுதியில் விபத்தில் சிக்கி உயிரிழந்த நபரை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதி பகுதியில், மீன் ஏற்றிச் சென்ற லோரி ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து, 2025 நவம்பர் 16 அன்று, காத்தான்குடி காவல் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் பலத்த காயமடைந்த பாதசாரி, மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஒரு யாசகம் பெறுபவர் எனத் தெரியவந்துள்ளதுடன், அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
இறந்தவரின் புகைப்படம் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், அவரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.
இது தொடர்பாக ஏதேனும் தகவல்கள் உள்ளவர்கள், பொலிஸார் அறிவித்துள்ள தொலைபேசி எண்கள் மூலம் தகவல்களை வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
12/24/2025 06:33:00 PM
Home
/
Unlabelled
/
மட்டு. ஆரையம்பதி பகுதியில் விபத்தில் சிக்கி உயிரிழந்த நபரை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்
மட்டு. ஆரையம்பதி பகுதியில் விபத்தில் சிக்கி உயிரிழந்த நபரை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments: