News Just In

12/24/2025 06:37:00 PM

கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு!

கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு!




இயற்கை அனர்த்தம் காரணமாக நாடளாவிய ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இயேசு பாலகனின் பிறப்பை குறிக்கும் கிறிஸ்மஸ் பண்டிகை வியாழக்கிழமை(25) கொண்டாடப்பட உள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தில் அமைதியான முறையில் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணம் அடைய வேண்டி வழிபாடுகளில் ஈடுபடவுள்ளனமட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் விசேட பாதுகாப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான கிறிஸ்மஸ் நள்ளிரவு ஆராதனை புளியந்தீவு மரியாள் தேவாலயத்தில் மட்டு மறை மாவட்ட ஆயர் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமான கிறிஸ்தவ மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதை காணக்கூடியதாக இருந்தது

இதேவேளை மாவட்ட அரச அதிபரின் பணிப்புரைக்க அமைவாக விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதை காணக்கூடியதாகவுள்ளது.

No comments: