35 வருடங்களாக அரச சேவையில் பல்வேறு பதவிகளை வகித்து, சேவையாற்றிய மண்முனை தென்மேற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன் அரச சேவையில் இருந்து ஓய்வுபெறுகின்றார்.
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள முனைக்காடு கிராமத்தில் பிறந்த இவர், ஆரம்பக் கல்வியை முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்திலும், உயர்கல்வியை சிவானந்தா தேசிய பாடசாலையிலும் பயின்று பேராதனைப்பல்கலைக்கழகத்தில் வணிகமானி பட்டப்படிப்பில் விசேடசித்தி பெற்ற பட்டதாரியாக வெளியேறினார்.
கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ண மிசன் வித்தியாலயத்தில், வர்த்தகப்பட்டதாரி ஆசிரியராக தனது அரச நியமனத்தினை 1985இல் ஏற்று கடமையை பொறுபேற்றுக்கொண்ட இவர், 1987ல் பிரதி அதிபராக, பின்னர் அதிபராகவும் அப்பாடசாலையில் கடமையாற்றி, முதலைக்குடா மகா வித்தியாலய அதிபராக கடமையேற்று அப் பாடசாலையினை வழிநடத்தி பின்னர், 17வருடங்களுக்கு மேலாக கோட்டக் கல்விப் பணிப்பாளராகவும் பதவி வகித்துள்ளார்.
கல்வி டிப்ளோமாபட்டத்தினையும், கல்வி முதுமாணி பட்டத்தினையும் நிறைவு செய்த இவர், கொல்லநுலை, கச்சக்கொடி சுவாமி மலை, குழுவினமடு, முனைக்காடு சாரதா வித்தியாலயம், முதலைக்குடா கனிஸ்ட வித்தியாலயம், அம்பிளாந்துறை கனிஸ்ட வித்தியாலயம் போன்ற பாடசாலைகள் இவரின்பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட பாடசாலைகளாகும்.
மேலும், 11 பாடசாலைகளை தமது காலத்தில் தரமுயர்த்தியுள்ளதுடன், தொண்டர் ஆசிரியர் நியமனம், கல்வி அபிவிருத்தி போன்ற செயற்பாடுகளுக்கும்அதிகளவான பங்களிப்பினை வழங்கியுள்ளார்.
முதன்முறையாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் கணித, விஞ்ஞான பிரிவுகளை வலயக் கல்விப் பணிப்பாளருடன் இணைந்து பாடசாலைகளில்ஆரம்பித்து, அவர்களுக்கான மேலதிக வகுப்புக்களுக்காக பல்வேறு நபர்களையும் நாடிஉதவிகளைப் பெற்று, அச் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளார். இதன் பயனாக இரண்டு மாணவர்கள் பொறியியல் துறைக்கும், சித்த மருத்துவத்திற்கு ஒரு மாணவியும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: